நிலக்கடலில் நீந்துகின்ற வெண்ணிலா அவள்
மழைக்கும் வெயிலுக்கும் பிறந்த... வானவில் குழந்தைஅவள்
காமன் வீட்டின் கடைசி பெண் அவள்
ஆண்களின் நாட்டில் முதல் மந்திரி அவள்
இந்த துளியின் மேல் விழுந்த கடல் அவள்

வார்த்தைகளில் அடங்காத பேரழகி அவள்
ராமர்களும் தடுமாறும் போதை அவள்
சீதைகளும் ஒளவ்வியம் கொள்ளும் கோதை அவள்
கண்ணதாசன் பேனாவாக்கு எட்டாத காதல் காவியம் அவள்
இந்த குதிரயை ஒட்டுகின்ற கடிவாளம் அவள்


கேட்டதை தருகின்ற காமதேனு அவள்
மான்குட்டிகளும் நடை பயிலும் பள்ளி அவள்
சாலைகளில் சேலைகளின் விளம்பரம் அவள்
சூரியனுக்கே வெளிச்சம் தருகின்ற மின்மினி அவள்
இந்த பொட்டை முகம் என்னும் மதியில் இடுகின்ற நங்கை அவள்


அம்மா தந்த முதல் முத்தம் அவள்
என் தூக்கங்களை களவாடும் கனவு அவள்
என் மடியில் தவழும் கணனி குழந்தை அவள்
காலை பனியில் உறங்கும் தலையனையும் அவள்
இந்த பாலகனை தாங்குகின்ற தாய் அவள்



கேட்காமலே தருகின்ற வள்ளல் அவள்
பார்த்தாலே காய்ச்சல் தருகின்ற மருந்து அவள்
குயில்களுக்கும் குரல் கொடுக்கும் பின்னணி பாடகி அவள்
விழி என்னும் திரையில் கலர் படம் காட்டும் திரையரங்கம் அவள்
இந்த நெருப்பை தின்கின்ற மெழுகு அவள்


வசந்த காலத்தின் மரங்கள் அவள்
கோடைகாலத்தின் கடற்கரையும் அவள்
காலை பொழுதின் என் தேடல்களும் அவள்
என் இரவுகளின் தாகமும் அவள்
என்னையே எனக்கு காட்டும் கண்ணாடி அவள்


5 comments:

superb!!!

thank u...............

//நிலக்கடலில் நீந்துகின்ற வெண்ணிலா அவள்
மழைக்கும் வெயிலுக்கும் பிறந்த... வானவில் குழந்தைஅவள்//
//காலை பொழுதின் என் தேடல்களும் அவள்
என் இரவுகளின் தாகமும் அவள்//

நல்லாய் இருக்குது..... வாழ்த்துக்கள்....

நன்றி சுல்த்தான் அவர்களே .........

superb machan...

Post a Comment

About this blog

Pages

Powered By Blogger

About Me

My photo
இங்கே நீங்கள் வாசிக்கும் பதிவுகள் அனைத்தும் என் எண்ணபதிவிலிருந்து வெளிவந்தவை .............. உங்கள் கருத்துக்களும் இங்கே வரவேற்கபடுகின்றது .....

Followers

Search This Blog

துளியில் நனைந்தவர்கள்

viewers online