
கூந்தல் காட்டில் வாசம் வீசுவாள்-பெண்
நெற்றி பரப்பில் அழகை விதைப்பாள்-பெண்
இருவிளி அசைவில் இமயத்தை சாய்ப்பாள்-பெண்
கன்னகுழியில் அழகுக்கு அழகு செய்வாள்-பெண்
சின்ன சிரிப்பில் ஆடவரை மயக்குவாள்-பெண்
இதழ்களில் தேனை வார்ப்பாள்-பெண்
தத்தை மொழிபேச்சில் போதை தருவாள்-பெண்
சங்கு கழுத்தில் தங்கம் பதிப்பாள்-பெண்
குறிஞ்சி நிலத்தில் பெண்மையை நாட்டுவாள்-பெண்
விரல் அசைவில் பல கதை பேசுவாள்-பெண்
இல்லாத இடையில் நாட்டியம் காட்டுவாள்-பெண்
பாதங்களால் பாதைக்கும் உயிர் ஊட்டுவாள்-பெண்
பூத்தபின் வாடாத பூவும் -பெண் இவள்தான் !
Labels:
கவிதை-இளம் பெண்


2 comments:
nice.... நல்லாயிருக்கு........... தொடரட்டும் உங்கள் பணி.....................
நன்றி மிஸ்டர் வாணன்
Post a Comment