மார்கழி மாதத்தில் ஒருநாள் .................

காலை 5 மணி................................

காலை இளம் பனி இன்னும் சரியாககூட விலகவில்லை....


மொட்டுக்கள் எல்லாம் மலர்வதை மறந்து ஆழ்ந்த உறக்கதில் இருந்தன....

பூமி அன்னையோ இறுக்கி இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்..................

அந்த அழகிய காலை பொழுது, நான் மட்டும் வாக்கிங் போய்க்கோண்டு இருந்தேன்...........

ஆனால் சாலையின் இருமருங்கிலும் தூங்கவே வழியில்லாமல் கிடக்கும்ஒரு கூட்டம்!

அல்லது எதுவுமே இல்லாத ஒரு கூட்டம்!

குளிரால் நடுங்கும் ஒரு பிள்ளை கட்டி அணைக்கும் ஒரு தாய்...........

பசியால்துடிக்கும் ஒரு பிள்ளை பாலே இல்லாத மார்பில் பால் கொடுக்கும் தாய்.................

பிள்ளைக்கு முத்தமிட்டு தன் பசியை மறக்கும் தாய்..................

வசந்ததுக்காய் காத்திருக்கும் மரங்கள் போல ஜனங்களின் வருகைக்காய் காத்திருக்கும் தெருக்கள் !

அல்லது தெரு வாசிகள் !


எதற்க்கு இது ???

காலை உணவுக்கா ?

அல்லது அன்றைய ஒரு பொழுது உணவுக்கா??

இல்லை பக்கத்து தட்டில் ராத்திரி வாங்கிய கடன் கொடுக்கவா.???

இல்லை இரவு நுளம்புக்கு கொசு வர்த்திக்கா ???????

(இரத்தம் இல்லாதவர்களிடம் இரத்தத்தை குடிப்பதே இந்த நாட்டில் உள்ள கொசுக்களுக்கும் பழக்கப்பட்டுவிட்டது )

இப்படியாக விடை தெரியாத கேள்விகள் என்னில்!!!!!

அல்லது விடையே இல்லாத கேள்விகள் என்றே வைத்துக்கொள்ளலாம் !!!! ..

அதற்க்கு இடையில் என்னிடம் கைவிரித்தது ஓர் எதிர்காலம்


நானும் கைவிரித்து விட்டேன் ......

வாங்கிங்க் போகும் என்னிடம் ஏது பணம் ,பொருள்.........

பாவம் குழந்தைக்கு ஏமாற்றம்................

ஆனாலும் அதற்க்கு அது புதிதல்ல.........

எனக்கு புதிதுதான் .................

கொடுக்கமுடியாதது !!!!

தந்தது பெரிய மாற்றம் ..................

குழந்தையை கடந்து வெகு தூரம் வந்திருப்பேன்

இத்தனை காட்சிகளும் என் முன்னால் படமாக்க பட

என் மன திரையில் ஒரு சஞ்சலம்

சஞ்சலத்திற்க்கு காரணம் அந்த பால்மணம் மாறாத சிசுவா??? அல்லது நான் கண்ட காட்ச்சிகளா????? என் மனமே சண்டை பிடித்துக்கொண்டது!!!!!!!!!!!!!!

அப்போது தான் என்னுள் பல கேள்விகள்...........

இல்லை இல்லை வேள்விகள் ...........

இவர்கள் யார் ?

போரில் எல்லாவற்றையும் பறிகொடுத்த அகதிகளா?

இல்லை பிறப்பிலேயே அநாதைகளா ??

மனித மிருகங்களை பெற்றெடுத்த தெய்வங்களா ???

யார் அறிவார்!!!!!!!!!!!!!

காலம் பதில் சொல்லுமா ? ......

இல்லை காலன் தான் பதில் சொல்வானா!!!!!!!!!!!!!!!!!!!!!!!

***************************************************************************************

நேரம் 6:00 ஆகியிருக்கும்

என்கூடவும் சேர்ந்தது ஒரு கூட்டம்


கொஞ்சம் வாக்கிங்

சிலது ஜாக்கிங்க்

சூரியனும் மெல்ல வாக்கிங் வருகிறான் என்னோடு

ம்ம்ம்ம்ம் சரி எங்களோடு ..........................

நித்திரையில் இருந்த கடை வாசல்கள் அப்போதுதான் மெல்ல கண் விழித்துபார்க்கின்றன

பூமியோ சோம்பல் போக்கிறது

தெருவழியே இருந்த கூட்டங்களும் தங்கள் தொழிலுக்கு கெளம்புகின்றன

கூட்டம் கலைகிறது

கூட்டம் கூடுகிறது

மீண்டும்

நினைவில் குழந்தை

ஏதாவது கிடைத்திருக்கும் என்கிறது மனது

நல்ல ஜீவன்களும் உலகில் உண்டுதானே !!!!!!!!!!!!

எனக்கு நானே சமாதானம்..........................................

அல்லது உண்மை என்றே சொல்லலாம்.....................

மயான அமைதியாக இருந்த கொழும்பு நகரமே சற்றே நிமிடங்களில்

மரண வீடாய் ஆனது....................

அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரிந்த வாகனங்கள் ........................

கண்ணிமைக்கும் நொடிக்குள் பல கடந்துசென்றது......................

நகரமே ஒலி வெள்ளத்தில் மூழ்கியது

நகரமே நரகமானது

நான் வாக்கிங் போய் திரும்பும் இடம் இன்னும் கொஞ்ச தூரம் போகவேண்டியதால் என் பயணம் தொட்ர்ந்தது

**********************************************************************************************************************

நேரம் ஒரு 7:00 ஐ எட்டியிருக்கும் ............

இலைகளே தெரியாமல் பூத்திருக்கும் மரங்கள்


பூக்களால் நிரப்பப்பட்ட பாதைகள்

இடை இடையே மேனியில் விழும் நீர் துளிகள்

என்று

என் ரணங்களுக்கு மருந்தாகி

என்னை பூரணமாக்கியது........................................

துள்ளி குதித்து பாடசாலை செல்லும் பள்ளி பூச்சிகள்

பட்டாம் பூச்சிகள்

கண்களை கொள்ளை கொள்ளும் தாவணி

என்று என் மனமே ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது

நான் கடந்து வந்த பாதைகளையும் மறந்துவிட்டேன்

என் மனதில் இருந்த சஞ்சலங்களுக்கு சிறகு முளைத்துவிட்டது

கூடவே எனக்கும் முளைத்துவிட்டது

காற்றில் மிதந்து சொர்க்கத்திற்க்கே செல்வதுபோல உணர்வு................................

கொஞ்சம் சென்றதும்..............................

அழகிய இளம் சோலை ஒன்று எனக்கு எதிராய் வாக்கிங் வந்துகொண்டிருந்தது


தன் குட்டி நாயுடன்....................

கொடுத்து வைத்தது நாய்.........................

அத்ற்க்கு உடுப்பு

நாய்க்கு உடுப்பா??????

பனியில் யூரம் வந்துவிடும் ........ம்ம்ம்ம்ம்.......................................

சட்டையில்லாத தெருவாசிகள் எண்கண்முன் தோன்றினர்

உடனேயே மறைந்தனர் அவர்கள்........................

நானும் என்னை மறந்துவிட்டேன்

அவள் என்னை நெருங்கிவிட்டதால்

என்னருகே வந்த அவள்

“டைம் பிளீஸ் “

(என் டைம் நல்லாய் இருக்குது எண்டு நினைச்சு கொண்டு)

இப்ப.... வந்து வந்து நல்ல நேரமுங்கோ ........

எண்டு ஏதோ என்னை அறியாமலே சொல்லிவிட்டேன்

அவளும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள் .....................

அப்போது தான் யாரோ நேரம் ஏழு அரை என்று சொன்னது என் காதில் விழுந்தது

நல்ல வேளை ஏழு அரையிலிருந்து தப்பிவிட்டேன் என்றது உள் உணர்வு

(ம்ம்ம்ம் உண்மைதான் சனி பிடித்தால் விடாது

உஷார் நண்பர்களே !!!!!அழகை பார்த்து மயங்கி விடாதீர்கள்

அழகில்தான் ஆபத்து இருக்கிறது )

இவ்வாறு அழகிய கனவில் மிதந்து கொண்டிருந்த என்னை யாரோ தட்டி எழுப்புவது போல சூரியனும் தன் பொற் கதிர்களால் என் மேனியை பதம் பார்க்கத் தொடங்கிவிட்டான் .

காலை வெய்யில் உடம்புக்கு நல்லது தானே அதனால் நான் அவனை கண்டுகொள்ளவில்லை ...........

ஆனாலும் நேரமும் 8:00 ஆகிவிட்டது நான் வர வேண்டிய இடமும் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு வீடுநோக்கி திரும்பினேன்.....

அப்பொழுதுதான் துன்பங்க்களின் பாதையை மறுபடியும் சந்திக்க போகிறேன் என்று ஒரு ஏக்கம்

உடனே குழந்தை நினைவில் வர

குழந்தைக்காக

நான் வந்த பாதையில் எனக்கு தெரிந்த ஓர் கடையில் கடனுக்கு கொஞ்ச பழங்களை வாங்கிக்கொண்டு சென்றேன் ........

அப்போது தொடக்கம் என் நினைவில் குழந்தைதான்.....................

குழந்தை நினைவில் ???????????????

வேறொருவர்

இல்லை

தாய்

இல்லை

உடன்பிறப்புக்கள்

இல்லவே இல்லை பசி மட்டும்தான் ......................................................

ஒருநாள் பசிக்கு மட்டும் என்னால் முடிந்தது

கையில் பழத்துடன் புறப்படுகிறேன் .................................


நிலக்கடலில் நீந்துகின்ற வெண்ணிலா அவள்
மழைக்கும் வெயிலுக்கும் பிறந்த... வானவில் குழந்தைஅவள்
காமன் வீட்டின் கடைசி பெண் அவள்
ஆண்களின் நாட்டில் முதல் மந்திரி அவள்
இந்த துளியின் மேல் விழுந்த கடல் அவள்

வார்த்தைகளில் அடங்காத பேரழகி அவள்
ராமர்களும் தடுமாறும் போதை அவள்
சீதைகளும் ஒளவ்வியம் கொள்ளும் கோதை அவள்
கண்ணதாசன் பேனாவாக்கு எட்டாத காதல் காவியம் அவள்
இந்த குதிரயை ஒட்டுகின்ற கடிவாளம் அவள்


கேட்டதை தருகின்ற காமதேனு அவள்
மான்குட்டிகளும் நடை பயிலும் பள்ளி அவள்
சாலைகளில் சேலைகளின் விளம்பரம் அவள்
சூரியனுக்கே வெளிச்சம் தருகின்ற மின்மினி அவள்
இந்த பொட்டை முகம் என்னும் மதியில் இடுகின்ற நங்கை அவள்


அம்மா தந்த முதல் முத்தம் அவள்
என் தூக்கங்களை களவாடும் கனவு அவள்
என் மடியில் தவழும் கணனி குழந்தை அவள்
காலை பனியில் உறங்கும் தலையனையும் அவள்
இந்த பாலகனை தாங்குகின்ற தாய் அவள்



கேட்காமலே தருகின்ற வள்ளல் அவள்
பார்த்தாலே காய்ச்சல் தருகின்ற மருந்து அவள்
குயில்களுக்கும் குரல் கொடுக்கும் பின்னணி பாடகி அவள்
விழி என்னும் திரையில் கலர் படம் காட்டும் திரையரங்கம் அவள்
இந்த நெருப்பை தின்கின்ற மெழுகு அவள்


வசந்த காலத்தின் மரங்கள் அவள்
கோடைகாலத்தின் கடற்கரையும் அவள்
காலை பொழுதின் என் தேடல்களும் அவள்
என் இரவுகளின் தாகமும் அவள்
என்னையே எனக்கு காட்டும் கண்ணாடி அவள்



இலங்கையில் லஞ்சம்
தொப்பை இல்லா போலீஸ்
அரிசி விலையேற்றம்


****************************************


பிரசவ அறை
அழும் குழந்தை
இறந்த தாய்


*************
உன் பெயரை மீண்டும் மீண்டும்
சொல்லிபார்க்கிறேன்
முதலாம் வகுப்பு மாணவன் போல.........

உதட்டிலிருந்து தேன்
வழிந்து கடலாகியது..........

***************

************
எனக்கு அவள் மேல்
தீராத கோபம்!!!!!!!!!!

கடனாக என்னிடம் வாங்கிய
முத்தத்திற்க்கு.................
முதல் மட்டும் தந்து
ஏமாற்றிவிட்டால்!!!!!!!!!!!!!

வட்டிக்கு அலைந்து அலைந்து
என் அசலும் தீர்ந்து விட்டது........

சங்கதி ஊருக்கு வரமுன்
இரண்டையும்
சத்தமில்லாமல் தந்துவிடு-என்னவளே .

********************

**********
அவளை மறுபடியும் மறுபடியும்
பார்க்கிறேன்-- திருப்தியடையவில்லை
என் மனம்

என்னை ஒரு முறை கண்ணாடியில்
பார்த்ததுமே சலித்துவிடுகிறேன்.....
********************


************
ஆண்கள் பாவம் ...
அன்றுதான்
உணர்ந்து கொண்டேன்

முதன் முதலாக
உன்னை பார்த்தபோது............

***************

***********
பூங்காவில் உன்னோடு
தனிமையில் நான் மட்டும்
இருக்க விரும்பினேன்

பாவம் நான்..........
கிடைத்தது ஏமாற்றம் தான்

தேன் எடுக்க வந்த வண்டுகள்
பூவை மறந்து
உன்னை சூழ்ந்து விட்டன

பாவம் வண்டுகள்.......
இறுதியில் என் போல் ஆயின .....

****************


***********
நான் வந்த பாதையை
திரும்பி பார்க்கிறேன்
பூக்களால் பூத்திருந்தது
வழமைக்கு மாறாக

பிறகு தான் உணர்ந்து கொண்டேன்
என்னவளின் வருகையை
அவளின் வாசத்தை வைத்து................

**************


படிக்காத பேதை அவள் அனுபவத்தில் மேதை இவள்...
நிலாவுக்கும் சோறூட்டுவாள் நீ உண்பதற்காய்...
பல கதைகள் உரைத்துடுவாள் மழலைமொழியில்..
மழலைமொழியின் மொழி பெயர்ப்பாளரும் இவள் தான்...
இவள் ஊட்டும் பால் ஞானம் கொடுக்கும் போதி மரம்..
அன்பையும் அறிவையும் குழைத்து ஊட்டுவாள் சோறாய்..
சிலநேரங்களில் அவளுக்கு உணவு பிள்ளையிடும் முத்தம்மட்டும்தான்!
விரதம் இருப்பாள் நீ சுகமாய் உண்டு உறங்க ......
விழிகளுக்குள் உன்னை வைத்து இமைகளால் காத்திடுவாள்..
போற்று அவளே தெய்வமாய் தெய்வமும் உன்னை ஆதரிக்கும் .......


நீ எவ்விடம் என்று வினவினேன்???????

உன்னிடம் என்றாள் ...

என்னிடமா நான் உன்னை இதற்கு முன் பார்த்ததில்லை....

"நீ என்னை பார்த்ததுண்டா" ???????

சிறிதுநேர மௌனம் ............................

சரி விடு!!!!!!!!!! உன் முகவரி என்ன என்று கேட்டேன்?????

நீ தான் முகவரி என்றாள்!

எனக்கு புரியவில்லை என்றேன்...

உன் மனதை கேள் என்றாள்!!!!!!!!!

கேட்டேன் மனதை............

அது சொன்னது!!! "இவள் தான் உன் இதய வீட்டில் குடியிருப்பவள்..

இவளது முகவரி உன் இதயம்

இவள் இதனை காலமும் வாடகை தரவில்லை

கைமாறாக நீ அவளிடம் ஏதாவது கேள்" என்றது....

கேட்டேன் அவளை ........

சின்ன சிரிப்பும் சிறிதுநேர மௌனமும் மட்டுமே மிஞ்சியது ...........................


மார்கழி மாதத்தின் குழந்தை இவள்
நதிகள்,குளங்கள் ,எரிகளின் தாய் இவள்
கோடை பயிர்களின் மாமியார் இவள்
பட்டு பூச்சிகளின் காதலி இவள்
குதித்து விழையாடும் குழந்தைகளின் தோழி இவள்
விண்ணுக்கும் மண்ணுக்குமான தொடர்ச்சியில்லா பாலம் இவள்
ஓட்டை வீட்டின் கூரையும் இவள்
இவள் போடும் ஜலதரங்கம் A.R.Rக்கு எட்டாத இசை ............


பாலைவனத்தில் நின்ற ஒற்றை மரம்- நட்பு
திசை தெரியாத காட்டிலும் திசைகாட்டி -நட்பு
சாலைகளில் சோலைகளை காட்டுவதும் -நட்பு
காதலுக்கு அச்சாணியும் -நட்பு
நண்பர்களே !நட்பின் ஆழம் பார்க்காதீர்கள்
ஆழம் அறியாமல் காலைவிடுங்கள்- மூழ்க மாட்டீர்கள் .
மூழ்கினாலும் கிடைப்பது என்னவோ முத்துதான்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு "


குள்ளநரிகளின் காட்டில், பல பச்சோந்திகள்! சில மான்கள்! ........................
பலரும் உறங்கும் வீட்டில் திறந்த வாசல் ........................
ஏமாத்துபவரும் ஏமாறுபவரும் அடிக்கடி சந்தித்துகொள்ளும் இடம்.......
எப்போதும் லாபமே தருகின்ற பங்கு சந்தை ......


கூந்தல் காட்டில் வாசம் வீசுவாள்-பெண்
நெற்றி பரப்பில் அழகை விதைப்பாள்-பெண்
இருவிளி அசைவில் இமயத்தை சாய்ப்பாள்-பெண்
கன்னகுழியில் அழகுக்கு அழகு செய்வாள்-பெண்
சின்ன சிரிப்பில் ஆடவரை மயக்குவாள்-பெண்
இதழ்களில் தேனை வார்ப்பாள்-பெண்
தத்தை மொழிபேச்சில் போதை தருவாள்-பெண்
சங்கு கழுத்தில் தங்கம் பதிப்பாள்-பெண்
குறிஞ்சி நிலத்தில் பெண்மையை நாட்டுவாள்-பெண்
விரல் அசைவில் பல கதை பேசுவாள்-பெண்
இல்லாத இடையில் நாட்டியம் காட்டுவாள்-பெண்
பாதங்களால் பாதைக்கும் உயிர் ஊட்டுவாள்-பெண்
பூத்தபின் வாடாத பூவும் -பெண் இவள்தான் !


நீ ஆயுதம் வைத்திருந்தாலும்,
நிராயுதபாணியுடன் ஆயுதம் இன்றி சண்டையிடு***
நீ நிராயுதபாணியாக இருந்தாலும்,
எதிரி ஆயுதம் கண்டு பிறமுதுகு காட்டிவிடாதே!
உன் கைகளே உனக்கு சிறந்த ஆயுதம்
வெறியுடன் போராடு ............................................



உனக்கு பலர் சவால் விடுகிறார்கள் எனில்
நீ வளந்துகொண்டுருக்கிறாய் என்று அர்த்தம்!
உனக்கு பலர் எதிரிகள் ஆகிறார்கள் எனில்
நீ பலருக்கு சவால் விடுகிறாய் என்றுதான் அர்த்தம்!


அமாவாசை இரவு
மொட்டை மாடியில் நான்.....
ரசித்து கொண்டிருந்தேன் நிலாவை


அவள்(உயிர் உள்ள சிலை) தொட்டதால் !
சிலைகள் எல்லாம் உயிர் பெற்றன **
நான் மட்டும் சிலையாகிவிட்டேன் -
என் உயிரோடு(அவளோடு ) என் உயிர் சேர்ந்ததால் **
மறுபடியும் தொட்டு சிலைக்கு உயிர் தந்தாள் என்னவள் .

About this blog

Pages

Powered By Blogger

About Me

My photo
இங்கே நீங்கள் வாசிக்கும் பதிவுகள் அனைத்தும் என் எண்ணபதிவிலிருந்து வெளிவந்தவை .............. உங்கள் கருத்துக்களும் இங்கே வரவேற்கபடுகின்றது .....

Followers

Search This Blog

துளியில் நனைந்தவர்கள்

viewers online