அப்போது எனக்கும் அவளுக்கும்

வயதுகள் வருடங்களில் கூட ஆகவில்லை

ஒன்றாய் தவழ்ந்திருப்போம் ,விளையாடியிருப்போம்

அம்மா சொல்லி அறிந்திருக்கிறேன் ....
*****************************

வருடங்கள் இரண்டு மூன்று இருக்கும்

நிழல்களை கூட நிஜங்களாய் என்னும் வயது அது

ஒன்றாய் உண்டிருப்போம் ,உறங்கியிருப்போம்

அறியாத வயது...

வருடங்கள் ஈரைந்து ஆகியிருக்கும்

அதற்க்குள் எத்தனை சண்டைகள்

நட்புக்கள் ,பாசங்கள் ,நேசங்கள்

ஒளித்தும் பிடிச்சிருப்போம்

கலர் சொல்லியும் விளையாடியிருப்போம்

மணலில் புரண்டிருப்போம் மழையிலும் நனைந்திருப்போம்

பாடசாலைக்கு சேர்ந்தே சென்றிருப்போம்

ஒரே தட்டில் உணவை பகிர்ந்திருப்போம்

இரவினில் நிலவையும் பிடித்திருப்போம்.....

அக்கினி நட்சத்திர நேரத்தில் கூட வெயில் எங்களை சுட்டதில்லை......................
*******************************

வயதுகளும் பன்னிரண்டு ஆகியிருக்கும்

முதல் முதலாக பாடசாலையால் பிரிக்கபட்டோம்

அவள் பெண்கள் பாடசாலை! நான் ஆண்கள் பாடசாலை!

ஆனாலும் நட்புக்குள் பிரிவில்லை!!

நாட்கள் ஓடியது............

பருவ மாற்றங்கள் எனக்கும் அவளுக்கும் விரிசலை தந்தது

எதிர் வீடாக இருந்தாலும் தூரங்கள் அதிகமானதாய் உணர்ந்தேன்

இத்தனை நாட்களாய் என்னை நேராக பார்த்து பேசிய அவள்

இன்று என்னை கடைகண்களால் பார்க்கிறாள்

என்னை காணும்போதெல்லாம் முகத்துக்கு நேரே சண்டை பிடிக்கும் அவள்

இன்று நிலத்தை பார்த்துக்கொண்டே செல்கிறாள்

ஆனால் எனக்கு என்னில் பெரிய மாற்றங்கள் இருந்ததாக தெரியவில்லை......

வயதுகள் ஈரெட்டு ஆகியிருக்கும்!!

என்னிலும் மாற்றங்களை என்னால் உணர்ந்து கொள்ளமுடிகிறது

இத்தனை காலமும் அவளோடு பழகிய எனக்கு

இன்று அவள் புதிதாக தெரிகிறாள்

வழமைக்கு மாறாக அவளில் அழகை காண்கிறேன்

அதை ரசிக்கவும் செய்கிறேன்

அவள் உடை நடைகளில் அதிக கவனம் செலுத்துகிறேன்
****************************

இன்று அவளோடு நான் கதைப்பதென்றால்

அது படிப்பில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மட்டும்தான்

அவள் என்னிடம் சந்தேகங்களை கேட்க வரும்போதெல்லாம்

நட்பை கடந்து என்னுள் ஏதோ இனம் புரியாத உணர்வுகள் வந்துபோகும்

இன்று அந்த நட்பு ஆழமாக தொடரமுடியாமல் போனது

காரணம் சமூகமாகவும் இருக்கலாம் வயதாகவும் இருக்கலாம்

வெறும் புன்னகைகள் மாத்திரமே நட்பை பேசிக்கொண்டன

அவளது பழைய குறும்புதனங்களும் இன்று என்னால் காணமுடிவதில்லை

அடிக்கடி என்வீடில் காணும் அவளது கால் தடங்களை

இன்று அவள் வீட்டு முற்றத்தில் கூட காண்பது அரிதாகி விட்டது

வீடு அருகருகே இருந்தும் தொலை தூரங்களில் இருப்பதுபோல் உணர்வு
**********************************
நாட்கள் கடந்தன

நானும் என் மேல் படிப்புக்காய் ஊரை விட்டு வந்துவிட்டேன்

அவளும் ஊரைவிட்டு வெளிநாடு சென்றதாய் கேள்விப்பட்டேன்

எனக்கும் அவளுக்கும் தொடர்புகளே இல்லை

தூரங்கள் உண்மையிலேயே தொலைவானது

நினைவுகள் மட்டும் சுமையானது, சுகமானது ...
*******************************************
பயணங்களின் தொடர்ச்சியில்

தெருவிலே ஒருநாள் .........

யாரோ தோளில் தட்டுவது போல இருந்தது

திரும்பி பார்க்கிறேன்

கண்களாலேயே நம்பமுடியவில்லை

என் முன்னாடி பழையதோழி புதிதாய்

இருவரையும் அறியாமலே கண்கள் கண்ணீரால் மூழ்கியது

கண்ணீரினால் அன்பினை பரிமாறிக்கொண்டோம்

நலங்களும் விசாரித்துக்கொண்டோம் ...........

அவள் நெற்றியில் இருந்த குங்குமமும்

கழுத்திலிருந்த தாலியும் அவள் நிலையை எனக்கு உணர்த்தியது

பல கேள்விகளுக்கு ஆயத்தமான என்னை

கேள்விகளே கேட்க விடாமல் விடைகளை முதலே தந்துவிட்டாள் அவள்!!!!

“வெளிநாடு சென்றது என் திருமணத்துக்கு

அவர் business செய்யிறார்

இப்ப இங்க வீடு எடுத்து இங்கையே தங்கபோறம்

ஒரு பெண் குழந்தை “என்று அவள் சொல்லும் போதுதான்

குழந்தை ஒன்று அவளது பின்னால் ஒளிந்திருந்ததை கண்டேன் ..

குழந்தையை பார்க்கிறேன்..... ஆனாலும் ஏற்கனவே குழந்தையை சந்தித்தது போல உணர்வு

அப்படியே குழந்தையை தூக்கி ஒரு முத்தம் கொடுத்தேன்

அருகில் தான் எனது வீடு என்று சொல்லி அவளை கூட்டிசெல்கிறேன்

என் வீடுக்கு அருகில் வந்த அவள் எதிர்வீட்டை காட்டி இதுதான் என்னுடய வீடு என்கிறாள் அங்கே கூட்டியும் செல்கிறாள்

எனக்கோ எல்லாமே ஓர் கனவாய் இருந்தது

கூட்டி சென்று தன் கணவனை அறிமுகம் செய்கிறாள்

பின்னர் இருவரும் எங்களது பழைய நினைவுகளை பரிமாறிக்கொண்டோம்………
*****************************
ஒரு மூலையில் விளையாடிக்கொண்டிருந்த அவள் குழந்தை

அதே குறும்புதனம்

அவள் உருவதில் என் பழைய தோழியை பார்க்கிறேன் ...................
*******************************
“காப்பி “நீட்டுகிறாள் தோழி

குடித்துக்கொண்டே அருகே மேசையில் இருந்த ஆல்பத்தை புரட்டுகிறேன்

என்ன ஆச்சர்யம் !!!!!!!!!!!!!

ஆல்பத்தில் எனது சின்ன வயது புகைப்படம்

கூடவே அருகில் நின்று சிரிக்கிறது(புகைபடத்தில்) தோழியின் 3 வயது குழந்தை.......

8 comments:

சூப்பர் செந்தா , உன் கவிதைகள் உண்மையிலே உள்ளக்த்தை தொடுகின்றன , வாழ்த்துக்கள்

நன்றி

ஏழில் அண்ணா கலக்குறிங்க போங்க........ சும்மா சொல்லப்படாது சுப்பர்

நன்றி ராஜ்குமார் தம்பி ........:D

அருமை அருமை....கடைசி வசனம்தான் சற்று குழப்புகிறது...நீர் என்னமோ உள்குத்து ஒன்றை சொல்ல வாறீர் என்டு நினைக்கிறன்...

இல்லை இல்லை உள்க்குது ஒன்றுமில்லை ......அந்த புகைபடத்தில் இருப்பது நானும் என் தோழியும் தான் .....ஆனால் அவளுக்கும் அவள் மகளுக்கும் உருவ வித்தியாசம் எதுவுமில்லை என்றும் அவளை அவள் மகள் ரூபத்தில் காண்கிறேன் என்பதையே மறைமுகமாக சொல்லியிருந்தேன் ..........

//அந்த நட்பு ஆழமாக தொடரமுடியாமல் போனது


காரணம் சமூகமாகவும் இருக்கலாம் வயதாகவும் இருக்கலாம்//

சழூக தார்ப்பரியத்தை பிரதிபலிக்கிறது........
உள் மனதை தொடுகிறது....
தொடருங்கள்..................... வாழ்த்துக்கள்!!!

இலங்கை கவிப்பேரசு

Post a Comment

About this blog

Pages

Powered By Blogger

About Me

My photo
இங்கே நீங்கள் வாசிக்கும் பதிவுகள் அனைத்தும் என் எண்ணபதிவிலிருந்து வெளிவந்தவை .............. உங்கள் கருத்துக்களும் இங்கே வரவேற்கபடுகின்றது .....

Followers

Search This Blog

துளியில் நனைந்தவர்கள்

viewers online