எனக்கும் மணி அடித்தது.
அவளை கண்டதும்..............

இது வயசு கோளாறு தான் என்று நீங்கள் சொல்லலாம்
நானும் அதை ஏற்றிருப்பேன் எனக்கு வயசு 16 என்றால்,
ஆனால் எனக்குதான் 21 ஆச்சே........
அதுதான் நானும் இதை காதல் என்றே முடிவு செய்தேன் .......

அதை உறுதி செய்ய பல புத்தகங்களை புரட்டினேன்

எழுதியவர்களுக்கும் விடை தெரியவில்லை போலும்
எதிலுமே விடை கிடைக்கவில்லை........
எல்லாமே கேள்விகளாய் தான் இருந்தது??????
சரி அப்போ விடைதான் என்ன ???

"அவளுக்கும் உன்னை பார்க்கும் போது மணி அடித்திருந்தால்
அப்போது என்னுடையது உண்மை காதல் தான் "
என்றான் அனுபவம் வாய்ந்த நண்பன் கீவா ..........

சரி அவளிடமே கேட்டு விடுவோம் என்றது மனது
கேட்டால் உதை விழும் என்றது உணர்வு ......
நானோ மனதின் படியே நடந்துகொண்டேன்.......

அவள் அருகில் சென்று
"உங்களுக்கு மணியடித்ததா ???? என்றேன் ....
"அடித்தது" என்றாள் ......

சினிமாவில் வருவதுபோல .............
"சிறகுகள் இன்றியே பறக்கிறேன்!!!!!.
பட்டாம் பூச்சிகள் என்னை சுற்றுகின்றன !!!!!!!...........
காற்றில்மிதந்து கொண்டே பல கேள்விகள் கேட்கஆயுத்தமானேன்!!!!!!

அடுத்தகேள்வி...

ஆவலாக !!!!!!!!!!!"எப்போது?????"

"பக்கத்து வீட்டு........வீட்டு ............

"ஆ ஆ பக்கத்து வீட்டு வீட் டு ....அப்புறம்" என்று ஆர்வதுடன் கேட்டேன்
"அது வந்துது .................. பக்கதுவீட்டு மணிகண்டனை முதல் முதலாக பார்த்தபோது" என்றாள்.

அவ்வளவு தான் ................ஊசி பட்ட பலூன் ஆனேன்.....

அடுக்கடுக்காய் இருந்த கேள்விகள் எல்லாம் தொண்டைக்குழியில் தடைப்பட்டன........

குடிபோதையில் வீடு திரும்பும் குடிமகன் போல வழிகளையே பார்க்காமல் வீடுவந்து விட்டேன்.....

விடைகளே இல்லாமல் தொங்கிக்கொண்டிருந்த புத்தகத்தை மறுபடியும் திருப்பினேன் ..............................

கேள்வி:-
"உனக்கு மணி அடித்தால் காதலா????"

விடை கொடுத்தேன் .......
ஆமாம் மணி உனக்கு அடித்தால் நிச்சயம் காதல் தான்!!!!!!!!!!!
உனக்கு அல்ல !!!!!!!!!!!!!
மணிக்கும் அம்மணிக்கும்...............................................

5 comments:

கீவா தண்ட சொந்தப் பிரச்சனைக்கே.... இதில அவன் அனுபவசாலியாடா.... அது சரி இது எத்தினையாவது floor மணி....

சாரி பாஸ் ........ஆனால் (அம்)மணி உங்குட floor கிடையாது ..........

அடேய் பாதகா !!!! என்னை கொன்(ண்)றுதான் நீ கதை எழுத வேண்டுமா ??


வாணன் உங்கள் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

அண்ணே உங்களவிட்டா எனக்கு வேற யார் இருக்கு???? .....சொல்லுங்கோ பாப்பம் .......

அப்ப எண்ட flat தானோ????????????

வதை விடுப்பா விடுப்பா இதை எல்லாத்தையும் கண்டுக்காதை... தேவை எண்டா சொல்லு உனக்காகவும் ஒருக்கா _ _ _ _ஆயிடுறன்...

Post a Comment

About this blog

Pages

Powered By Blogger

About Me

My photo
இங்கே நீங்கள் வாசிக்கும் பதிவுகள் அனைத்தும் என் எண்ணபதிவிலிருந்து வெளிவந்தவை .............. உங்கள் கருத்துக்களும் இங்கே வரவேற்கபடுகின்றது .....

Followers

Search This Blog

துளியில் நனைந்தவர்கள்

viewers online