உந்தன் வழியில்
விழுந்து
விழியில்
தொலைந்தே
கனவில் 
திளைக்கிறேன்!

                                 

   











நின் கடலில் 
அமிழ்ந்து
நினைவை 
இழந்தே
உன்  பெயரை 
இமிழ்ந்து  
என் வாழ்க்கை -வாழ 
விழைகிறேன்! 

வன்மை 
களைந்து
மென்மை 
வளர்த்து 
என் பிழைக்க
உன் காதல்- கொண்டு 
அழைப்பாயா!! 


புன்னகை தேசமாய் நண்பர்கள்
சமுத்திரமாய் அண்ணண்கள்
ஆனந்தமாய் தம்பிகள்
பாசமலர் தங்கைகள்
என்று புது உறவுகளும் தொடர்கதையாய் - தந்தது பல்கலை


மறைந்து போகும் தமிழ்
திக்குவாய் ஆங்கிலம்
ரெண்டும் கெட்டான் சிங்களம்
என்று மும் மொழியிலும் பாண்டித்தியம் -தந்தது பல்கலை


அதிகாலை உறக்கம்
மதியநேர காலை சாப்பாடு
வருடத்தில் பல சிவாரத்திரிகள்
என்று நடமுறைகளையும் மாற்றியது - பல்கலை



அரசியல் காணாத வட்ட மேசை மாநாடு
எள்ளையும் எட்டாப் பகிரும்
எச்சில் உணவு நேசம்
என்று நட்பின் பிணைப்புகள் -தந்தது பல்கலை



காதலர்களின் கை கோர்ப்பில் ஒரு தவிப்பு
ஆம்ஸ்ட்றோங்க் காணாத நிலாக்கள்
அலைபாயும் மனது
என்று இளமை துடிப்புக்களும் - தந்தது பல்கலை


புரியாத லெக்சர்
தலையணைகலாய் போன நோட்ஸ்
தொட்டில் தாலாட்டாய் சில லெக்சேர்ஸ்
என்று இலவசமாக நித்திரை பயிற்ச்சியும் - தந்தது பல்கலை


பலிக்காத காலை கனவுகள்
ஏசி அறையில் குட்டி தூக்கம்
கடமை மறந்து சில நாள் படிப்பு
நடிப்பாய் ஒரு படிப்பு
என்று படிப்புக்கும் எங்களுக்கும் சிறந்த பாலம் - தந்தது பல்கலை


அரட்டைக்கும் குறட்டைக்கும் லெக்சர் ஹால்
சைட்டுக்கும் சின்ன பை(ஃ)ட்டுக்கும் காண்டீன்
ஓய்வறைகளாய் போன பல்கலை நூல்நிலையம்
என்று நல்லவற்றையும் கற்று -தந்தது பல்கலை

புரிந்து கொள்ள சிக்கலான மணி படம் போல வாழ்க்கை
இருந்தாலும்
இறுதியில் விருது பெறும் எங்கள் பல்கலை வாழ்க்கை








அப்போது எனக்கும் அவளுக்கும்

வயதுகள் வருடங்களில் கூட ஆகவில்லை

ஒன்றாய் தவழ்ந்திருப்போம் ,விளையாடியிருப்போம்

அம்மா சொல்லி அறிந்திருக்கிறேன் ....
*****************************

வருடங்கள் இரண்டு மூன்று இருக்கும்

நிழல்களை கூட நிஜங்களாய் என்னும் வயது அது

ஒன்றாய் உண்டிருப்போம் ,உறங்கியிருப்போம்

அறியாத வயது...

வருடங்கள் ஈரைந்து ஆகியிருக்கும்

அதற்க்குள் எத்தனை சண்டைகள்

நட்புக்கள் ,பாசங்கள் ,நேசங்கள்

ஒளித்தும் பிடிச்சிருப்போம்

கலர் சொல்லியும் விளையாடியிருப்போம்

மணலில் புரண்டிருப்போம் மழையிலும் நனைந்திருப்போம்

பாடசாலைக்கு சேர்ந்தே சென்றிருப்போம்

ஒரே தட்டில் உணவை பகிர்ந்திருப்போம்

இரவினில் நிலவையும் பிடித்திருப்போம்.....

அக்கினி நட்சத்திர நேரத்தில் கூட வெயில் எங்களை சுட்டதில்லை......................
*******************************

வயதுகளும் பன்னிரண்டு ஆகியிருக்கும்

முதல் முதலாக பாடசாலையால் பிரிக்கபட்டோம்

அவள் பெண்கள் பாடசாலை! நான் ஆண்கள் பாடசாலை!

ஆனாலும் நட்புக்குள் பிரிவில்லை!!

நாட்கள் ஓடியது............

பருவ மாற்றங்கள் எனக்கும் அவளுக்கும் விரிசலை தந்தது

எதிர் வீடாக இருந்தாலும் தூரங்கள் அதிகமானதாய் உணர்ந்தேன்

இத்தனை நாட்களாய் என்னை நேராக பார்த்து பேசிய அவள்

இன்று என்னை கடைகண்களால் பார்க்கிறாள்

என்னை காணும்போதெல்லாம் முகத்துக்கு நேரே சண்டை பிடிக்கும் அவள்

இன்று நிலத்தை பார்த்துக்கொண்டே செல்கிறாள்

ஆனால் எனக்கு என்னில் பெரிய மாற்றங்கள் இருந்ததாக தெரியவில்லை......

வயதுகள் ஈரெட்டு ஆகியிருக்கும்!!

என்னிலும் மாற்றங்களை என்னால் உணர்ந்து கொள்ளமுடிகிறது

இத்தனை காலமும் அவளோடு பழகிய எனக்கு

இன்று அவள் புதிதாக தெரிகிறாள்

வழமைக்கு மாறாக அவளில் அழகை காண்கிறேன்

அதை ரசிக்கவும் செய்கிறேன்

அவள் உடை நடைகளில் அதிக கவனம் செலுத்துகிறேன்
****************************

இன்று அவளோடு நான் கதைப்பதென்றால்

அது படிப்பில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மட்டும்தான்

அவள் என்னிடம் சந்தேகங்களை கேட்க வரும்போதெல்லாம்

நட்பை கடந்து என்னுள் ஏதோ இனம் புரியாத உணர்வுகள் வந்துபோகும்

இன்று அந்த நட்பு ஆழமாக தொடரமுடியாமல் போனது

காரணம் சமூகமாகவும் இருக்கலாம் வயதாகவும் இருக்கலாம்

வெறும் புன்னகைகள் மாத்திரமே நட்பை பேசிக்கொண்டன

அவளது பழைய குறும்புதனங்களும் இன்று என்னால் காணமுடிவதில்லை

அடிக்கடி என்வீடில் காணும் அவளது கால் தடங்களை

இன்று அவள் வீட்டு முற்றத்தில் கூட காண்பது அரிதாகி விட்டது

வீடு அருகருகே இருந்தும் தொலை தூரங்களில் இருப்பதுபோல் உணர்வு
**********************************
நாட்கள் கடந்தன

நானும் என் மேல் படிப்புக்காய் ஊரை விட்டு வந்துவிட்டேன்

அவளும் ஊரைவிட்டு வெளிநாடு சென்றதாய் கேள்விப்பட்டேன்

எனக்கும் அவளுக்கும் தொடர்புகளே இல்லை

தூரங்கள் உண்மையிலேயே தொலைவானது

நினைவுகள் மட்டும் சுமையானது, சுகமானது ...
*******************************************
பயணங்களின் தொடர்ச்சியில்

தெருவிலே ஒருநாள் .........

யாரோ தோளில் தட்டுவது போல இருந்தது

திரும்பி பார்க்கிறேன்

கண்களாலேயே நம்பமுடியவில்லை

என் முன்னாடி பழையதோழி புதிதாய்

இருவரையும் அறியாமலே கண்கள் கண்ணீரால் மூழ்கியது

கண்ணீரினால் அன்பினை பரிமாறிக்கொண்டோம்

நலங்களும் விசாரித்துக்கொண்டோம் ...........

அவள் நெற்றியில் இருந்த குங்குமமும்

கழுத்திலிருந்த தாலியும் அவள் நிலையை எனக்கு உணர்த்தியது

பல கேள்விகளுக்கு ஆயத்தமான என்னை

கேள்விகளே கேட்க விடாமல் விடைகளை முதலே தந்துவிட்டாள் அவள்!!!!

“வெளிநாடு சென்றது என் திருமணத்துக்கு

அவர் business செய்யிறார்

இப்ப இங்க வீடு எடுத்து இங்கையே தங்கபோறம்

ஒரு பெண் குழந்தை “என்று அவள் சொல்லும் போதுதான்

குழந்தை ஒன்று அவளது பின்னால் ஒளிந்திருந்ததை கண்டேன் ..

குழந்தையை பார்க்கிறேன்..... ஆனாலும் ஏற்கனவே குழந்தையை சந்தித்தது போல உணர்வு

அப்படியே குழந்தையை தூக்கி ஒரு முத்தம் கொடுத்தேன்

அருகில் தான் எனது வீடு என்று சொல்லி அவளை கூட்டிசெல்கிறேன்

என் வீடுக்கு அருகில் வந்த அவள் எதிர்வீட்டை காட்டி இதுதான் என்னுடய வீடு என்கிறாள் அங்கே கூட்டியும் செல்கிறாள்

எனக்கோ எல்லாமே ஓர் கனவாய் இருந்தது

கூட்டி சென்று தன் கணவனை அறிமுகம் செய்கிறாள்

பின்னர் இருவரும் எங்களது பழைய நினைவுகளை பரிமாறிக்கொண்டோம்………
*****************************
ஒரு மூலையில் விளையாடிக்கொண்டிருந்த அவள் குழந்தை

அதே குறும்புதனம்

அவள் உருவதில் என் பழைய தோழியை பார்க்கிறேன் ...................
*******************************
“காப்பி “நீட்டுகிறாள் தோழி

குடித்துக்கொண்டே அருகே மேசையில் இருந்த ஆல்பத்தை புரட்டுகிறேன்

என்ன ஆச்சர்யம் !!!!!!!!!!!!!

ஆல்பத்தில் எனது சின்ன வயது புகைப்படம்

கூடவே அருகில் நின்று சிரிக்கிறது(புகைபடத்தில்) தோழியின் 3 வயது குழந்தை.......


************************
அமாவாசை நேரம்
மாடிவீட்டு நிலா
வேடிக்கை பார்க்கும் நட்சத்திரங்கள்

**************************

*******************************
பாடசாலை பரிசளிப்பு விழா
விளையாட்டுதுறையில் முதல் மாணவன்
பரிசு "பாரதியும் தமிழும் "

********************************
***************
ஒருபக்க கவிதை
கவிதைக்கு முதல் பரிசு
தலைப்பு "கைகூ "

*****************
********
கடற்கரை
காதலர்கள்
கானல்நீர்

***********
********
கவிதை
வாசகன்
நீயும் நானும்

*********
*************************
விடைகொடுக்கும் பாடசாலை
வரவேற்க்கும் பல்கலை
தாய் வீட்டிலிருந்து கணவன் வீடு செல்லும் பெண்

****************************

*************************
தமிழ் ஆசிரியர் வீடு
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா
சூட்டிய பெயர் "அலெக்ஸ் "

****************************

*******************
காதலன்
காதலி
இருகோடுகள்

*******************



எனக்கும் மணி அடித்தது.
அவளை கண்டதும்..............

இது வயசு கோளாறு தான் என்று நீங்கள் சொல்லலாம்
நானும் அதை ஏற்றிருப்பேன் எனக்கு வயசு 16 என்றால்,
ஆனால் எனக்குதான் 21 ஆச்சே........
அதுதான் நானும் இதை காதல் என்றே முடிவு செய்தேன் .......

அதை உறுதி செய்ய பல புத்தகங்களை புரட்டினேன்

எழுதியவர்களுக்கும் விடை தெரியவில்லை போலும்
எதிலுமே விடை கிடைக்கவில்லை........
எல்லாமே கேள்விகளாய் தான் இருந்தது??????
சரி அப்போ விடைதான் என்ன ???

"அவளுக்கும் உன்னை பார்க்கும் போது மணி அடித்திருந்தால்
அப்போது என்னுடையது உண்மை காதல் தான் "
என்றான் அனுபவம் வாய்ந்த நண்பன் கீவா ..........

சரி அவளிடமே கேட்டு விடுவோம் என்றது மனது
கேட்டால் உதை விழும் என்றது உணர்வு ......
நானோ மனதின் படியே நடந்துகொண்டேன்.......

அவள் அருகில் சென்று
"உங்களுக்கு மணியடித்ததா ???? என்றேன் ....
"அடித்தது" என்றாள் ......

சினிமாவில் வருவதுபோல .............
"சிறகுகள் இன்றியே பறக்கிறேன்!!!!!.
பட்டாம் பூச்சிகள் என்னை சுற்றுகின்றன !!!!!!!...........
காற்றில்மிதந்து கொண்டே பல கேள்விகள் கேட்கஆயுத்தமானேன்!!!!!!

அடுத்தகேள்வி...

ஆவலாக !!!!!!!!!!!"எப்போது?????"

"பக்கத்து வீட்டு........வீட்டு ............

"ஆ ஆ பக்கத்து வீட்டு வீட் டு ....அப்புறம்" என்று ஆர்வதுடன் கேட்டேன்
"அது வந்துது .................. பக்கதுவீட்டு மணிகண்டனை முதல் முதலாக பார்த்தபோது" என்றாள்.

அவ்வளவு தான் ................ஊசி பட்ட பலூன் ஆனேன்.....

அடுக்கடுக்காய் இருந்த கேள்விகள் எல்லாம் தொண்டைக்குழியில் தடைப்பட்டன........

குடிபோதையில் வீடு திரும்பும் குடிமகன் போல வழிகளையே பார்க்காமல் வீடுவந்து விட்டேன்.....

விடைகளே இல்லாமல் தொங்கிக்கொண்டிருந்த புத்தகத்தை மறுபடியும் திருப்பினேன் ..............................

கேள்வி:-
"உனக்கு மணி அடித்தால் காதலா????"

விடை கொடுத்தேன் .......
ஆமாம் மணி உனக்கு அடித்தால் நிச்சயம் காதல் தான்!!!!!!!!!!!
உனக்கு அல்ல !!!!!!!!!!!!!
மணிக்கும் அம்மணிக்கும்...............................................



மார்கழி மாதத்தில் ஒருநாள் .................

காலை 5 மணி................................

காலை இளம் பனி இன்னும் சரியாககூட விலகவில்லை....


மொட்டுக்கள் எல்லாம் மலர்வதை மறந்து ஆழ்ந்த உறக்கதில் இருந்தன....

பூமி அன்னையோ இறுக்கி இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்..................

அந்த அழகிய காலை பொழுது, நான் மட்டும் வாக்கிங் போய்க்கோண்டு இருந்தேன்...........

ஆனால் சாலையின் இருமருங்கிலும் தூங்கவே வழியில்லாமல் கிடக்கும்ஒரு கூட்டம்!

அல்லது எதுவுமே இல்லாத ஒரு கூட்டம்!

குளிரால் நடுங்கும் ஒரு பிள்ளை கட்டி அணைக்கும் ஒரு தாய்...........

பசியால்துடிக்கும் ஒரு பிள்ளை பாலே இல்லாத மார்பில் பால் கொடுக்கும் தாய்.................

பிள்ளைக்கு முத்தமிட்டு தன் பசியை மறக்கும் தாய்..................

வசந்ததுக்காய் காத்திருக்கும் மரங்கள் போல ஜனங்களின் வருகைக்காய் காத்திருக்கும் தெருக்கள் !

அல்லது தெரு வாசிகள் !


எதற்க்கு இது ???

காலை உணவுக்கா ?

அல்லது அன்றைய ஒரு பொழுது உணவுக்கா??

இல்லை பக்கத்து தட்டில் ராத்திரி வாங்கிய கடன் கொடுக்கவா.???

இல்லை இரவு நுளம்புக்கு கொசு வர்த்திக்கா ???????

(இரத்தம் இல்லாதவர்களிடம் இரத்தத்தை குடிப்பதே இந்த நாட்டில் உள்ள கொசுக்களுக்கும் பழக்கப்பட்டுவிட்டது )

இப்படியாக விடை தெரியாத கேள்விகள் என்னில்!!!!!

அல்லது விடையே இல்லாத கேள்விகள் என்றே வைத்துக்கொள்ளலாம் !!!! ..

அதற்க்கு இடையில் என்னிடம் கைவிரித்தது ஓர் எதிர்காலம்


நானும் கைவிரித்து விட்டேன் ......

வாங்கிங்க் போகும் என்னிடம் ஏது பணம் ,பொருள்.........

பாவம் குழந்தைக்கு ஏமாற்றம்................

ஆனாலும் அதற்க்கு அது புதிதல்ல.........

எனக்கு புதிதுதான் .................

கொடுக்கமுடியாதது !!!!

தந்தது பெரிய மாற்றம் ..................

குழந்தையை கடந்து வெகு தூரம் வந்திருப்பேன்

இத்தனை காட்சிகளும் என் முன்னால் படமாக்க பட

என் மன திரையில் ஒரு சஞ்சலம்

சஞ்சலத்திற்க்கு காரணம் அந்த பால்மணம் மாறாத சிசுவா??? அல்லது நான் கண்ட காட்ச்சிகளா????? என் மனமே சண்டை பிடித்துக்கொண்டது!!!!!!!!!!!!!!

அப்போது தான் என்னுள் பல கேள்விகள்...........

இல்லை இல்லை வேள்விகள் ...........

இவர்கள் யார் ?

போரில் எல்லாவற்றையும் பறிகொடுத்த அகதிகளா?

இல்லை பிறப்பிலேயே அநாதைகளா ??

மனித மிருகங்களை பெற்றெடுத்த தெய்வங்களா ???

யார் அறிவார்!!!!!!!!!!!!!

காலம் பதில் சொல்லுமா ? ......

இல்லை காலன் தான் பதில் சொல்வானா!!!!!!!!!!!!!!!!!!!!!!!

***************************************************************************************

நேரம் 6:00 ஆகியிருக்கும்

என்கூடவும் சேர்ந்தது ஒரு கூட்டம்


கொஞ்சம் வாக்கிங்

சிலது ஜாக்கிங்க்

சூரியனும் மெல்ல வாக்கிங் வருகிறான் என்னோடு

ம்ம்ம்ம்ம் சரி எங்களோடு ..........................

நித்திரையில் இருந்த கடை வாசல்கள் அப்போதுதான் மெல்ல கண் விழித்துபார்க்கின்றன

பூமியோ சோம்பல் போக்கிறது

தெருவழியே இருந்த கூட்டங்களும் தங்கள் தொழிலுக்கு கெளம்புகின்றன

கூட்டம் கலைகிறது

கூட்டம் கூடுகிறது

மீண்டும்

நினைவில் குழந்தை

ஏதாவது கிடைத்திருக்கும் என்கிறது மனது

நல்ல ஜீவன்களும் உலகில் உண்டுதானே !!!!!!!!!!!!

எனக்கு நானே சமாதானம்..........................................

அல்லது உண்மை என்றே சொல்லலாம்.....................

மயான அமைதியாக இருந்த கொழும்பு நகரமே சற்றே நிமிடங்களில்

மரண வீடாய் ஆனது....................

அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரிந்த வாகனங்கள் ........................

கண்ணிமைக்கும் நொடிக்குள் பல கடந்துசென்றது......................

நகரமே ஒலி வெள்ளத்தில் மூழ்கியது

நகரமே நரகமானது

நான் வாக்கிங் போய் திரும்பும் இடம் இன்னும் கொஞ்ச தூரம் போகவேண்டியதால் என் பயணம் தொட்ர்ந்தது

**********************************************************************************************************************

நேரம் ஒரு 7:00 ஐ எட்டியிருக்கும் ............

இலைகளே தெரியாமல் பூத்திருக்கும் மரங்கள்


பூக்களால் நிரப்பப்பட்ட பாதைகள்

இடை இடையே மேனியில் விழும் நீர் துளிகள்

என்று

என் ரணங்களுக்கு மருந்தாகி

என்னை பூரணமாக்கியது........................................

துள்ளி குதித்து பாடசாலை செல்லும் பள்ளி பூச்சிகள்

பட்டாம் பூச்சிகள்

கண்களை கொள்ளை கொள்ளும் தாவணி

என்று என் மனமே ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது

நான் கடந்து வந்த பாதைகளையும் மறந்துவிட்டேன்

என் மனதில் இருந்த சஞ்சலங்களுக்கு சிறகு முளைத்துவிட்டது

கூடவே எனக்கும் முளைத்துவிட்டது

காற்றில் மிதந்து சொர்க்கத்திற்க்கே செல்வதுபோல உணர்வு................................

கொஞ்சம் சென்றதும்..............................

அழகிய இளம் சோலை ஒன்று எனக்கு எதிராய் வாக்கிங் வந்துகொண்டிருந்தது


தன் குட்டி நாயுடன்....................

கொடுத்து வைத்தது நாய்.........................

அத்ற்க்கு உடுப்பு

நாய்க்கு உடுப்பா??????

பனியில் யூரம் வந்துவிடும் ........ம்ம்ம்ம்ம்.......................................

சட்டையில்லாத தெருவாசிகள் எண்கண்முன் தோன்றினர்

உடனேயே மறைந்தனர் அவர்கள்........................

நானும் என்னை மறந்துவிட்டேன்

அவள் என்னை நெருங்கிவிட்டதால்

என்னருகே வந்த அவள்

“டைம் பிளீஸ் “

(என் டைம் நல்லாய் இருக்குது எண்டு நினைச்சு கொண்டு)

இப்ப.... வந்து வந்து நல்ல நேரமுங்கோ ........

எண்டு ஏதோ என்னை அறியாமலே சொல்லிவிட்டேன்

அவளும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள் .....................

அப்போது தான் யாரோ நேரம் ஏழு அரை என்று சொன்னது என் காதில் விழுந்தது

நல்ல வேளை ஏழு அரையிலிருந்து தப்பிவிட்டேன் என்றது உள் உணர்வு

(ம்ம்ம்ம் உண்மைதான் சனி பிடித்தால் விடாது

உஷார் நண்பர்களே !!!!!அழகை பார்த்து மயங்கி விடாதீர்கள்

அழகில்தான் ஆபத்து இருக்கிறது )

இவ்வாறு அழகிய கனவில் மிதந்து கொண்டிருந்த என்னை யாரோ தட்டி எழுப்புவது போல சூரியனும் தன் பொற் கதிர்களால் என் மேனியை பதம் பார்க்கத் தொடங்கிவிட்டான் .

காலை வெய்யில் உடம்புக்கு நல்லது தானே அதனால் நான் அவனை கண்டுகொள்ளவில்லை ...........

ஆனாலும் நேரமும் 8:00 ஆகிவிட்டது நான் வர வேண்டிய இடமும் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு வீடுநோக்கி திரும்பினேன்.....

அப்பொழுதுதான் துன்பங்க்களின் பாதையை மறுபடியும் சந்திக்க போகிறேன் என்று ஒரு ஏக்கம்

உடனே குழந்தை நினைவில் வர

குழந்தைக்காக

நான் வந்த பாதையில் எனக்கு தெரிந்த ஓர் கடையில் கடனுக்கு கொஞ்ச பழங்களை வாங்கிக்கொண்டு சென்றேன் ........

அப்போது தொடக்கம் என் நினைவில் குழந்தைதான்.....................

குழந்தை நினைவில் ???????????????

வேறொருவர்

இல்லை

தாய்

இல்லை

உடன்பிறப்புக்கள்

இல்லவே இல்லை பசி மட்டும்தான் ......................................................

ஒருநாள் பசிக்கு மட்டும் என்னால் முடிந்தது

கையில் பழத்துடன் புறப்படுகிறேன் .................................

About this blog

Pages

Powered By Blogger

About Me

My photo
இங்கே நீங்கள் வாசிக்கும் பதிவுகள் அனைத்தும் என் எண்ணபதிவிலிருந்து வெளிவந்தவை .............. உங்கள் கருத்துக்களும் இங்கே வரவேற்கபடுகின்றது .....

Followers

Search This Blog

துளியில் நனைந்தவர்கள்

viewers online